இந்த காலகட்டத்தில் பைக் திருட்டு என்பது அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களில் ஒன்று. இதனை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டாலும் , நம் உடைமைகளை பாதுகாப்பதில் முக்கிய பொறுப்பு நம்முடையதாகும். எனவே காவல் துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளின் படி அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
இதனைக் காட்சிப் படுத்தும் விதமாக , அடுத்தடுத்த பைக் திருட்டில் சிக்கிய நான்கு இளைஞர்கள்.லாவகமாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் Pasir Ris Central – லில் கார் பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் திருடப்பட்ட வழக்கில் காவல் துறை தீவிர விசாரணை நடத்திவந்தது. திருட்டு நடந்ததாக கூறப்படும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கேமராவின் ஒரு சில காட்சிகளின் உதவியோடு கையும் களவுமாக பிடிப்பட்டனர் .
பிடிப்பட்ட இந்த இளைஞர்கள் ஏற்கனவே இது போன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் , இந்த நான்கு இளைஞர்களும் 17 மற்றும் 19 வயதுக்குள் உள்ளவர்கள் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் இருந்து தங்கள் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டது.