சிங்கப்பூரில் 18 வயதுடைய Muhhamad Irfan Danyal Mohamad Nor எனும் மாணவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார். இந்த மாணவர் ஒரு பள்ளிவாசலில் உள்ள இடுகாடு, ராணுவ முகாம் முதலிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார்.
இதனைக் குறித்து உள்துறை சட்ட அமைச்சர் கா. சண்முகம் இன்றைய கால இளையர்கள் ஈர்க்கப்படுவது மிகுந்த கவலை அளிப்பதாக அவர் கூறினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 9 இளையர்கள் தீவிரவாத சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை,சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 6 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் கட்டுப்பாட்டின் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் கா.சண்முகம் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் சிங்கப்பூரை விட்டு வெளியேற அனுமதி கிடையாது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பணிப்பரியும் இடத்தையும் அனுமதி இன்றி மாற்றக்கூடாது.
வீட்டு முகவரியையும் அனுமதி இன்றி மாற்றக்கூடாது. அனுமதி இல்லாமல் சமூக ஊடகங்களிலும், இணையதளத்திலும் அணுக முடியாது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. இருந்த போதிலும் இளையர்கள் தீவிரவாதச் செயலுக்கு ஈர்க்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக கூறினார்.
வன்முறைக்கு எதிராக செயல்படும் மலாய்-முஸ்லிம் சமூக நிலைப்பாடு மற்றும் தடுத்து வைக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக கூறினார்.
“வன்முறையை எந்த சமயமும் ஊக்குவிப்பதில்லை. மக்களுக்கு அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை சமயம் கற்றுக் கொடுக்கிறது´´ என்று அவர் கூறினார். மறுவாழ்வு நடவடிக்கையில் பெரும்பாலான இளையர்கள் முன்னேற்றம் காட்டுவதாகவும் கூறினார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மறுவாழ்வு நடவடிக்கை மூலமாக ஒருவர் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதுவரை உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 16 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை சட்ட அமைச்சர் கா.சண்முகம் கூறினார்.