மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!!

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!!

சீனாவைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே அடிக்கடி தும்மல் வந்துள்ளது.

ஷாங்க்சி மாகாணத்தின் சியான் நகரில் வசிக்கும் சியாவ்மா எனும் நபர் தான் பயன்படுத்தாத மருந்தே இல்லை என்று கூறினார்.

ஜலதோஷம்,மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் அவருக்கு தொடர்ந்து இருந்துள்ளது.

இதற்காக அவர் பல மருத்துவர்களை நாடியும் எந்தவித பயனில்லை என்று கூறினார்.

இந்நிலையில் ஒரு மருத்துவர் அவரது மூக்கில் ஏதாவது பொருள் இருக்கலாம் என்று சந்தேகித்தார்.

மூக்கில் எண்டோஸ்கோபி மூலம் சோதனை செய்ததில் அந்த நபருக்கு மூச்சுக்குழாயில் பகடைக்காய் இருப்பது தெரியவந்தது.

மேலும் சிதைந்த நிலையில் இருந்த பகடை மூச்சுக்குழாயின் சுற்றியுள்ள தசையுடன் இணைந்திருந்தது.

அவரின் மூச்சுக்குழாயில் இருந்த 2 செ.மீ கட்டியை மருத்துவர்கள் எப்படியோ வெற்றிகரமாக அகற்றினர்.

சியாவ்மாவின் மூச்சுக்குழாயில் அது 20 ஆண்டுகளாக இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

அப்படியானால்,பகடை அவரது 3 வயதிலேயே மூக்கில் நுழைந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறினர்.

குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Follow us on : click here 

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg

Exit mobile version