எக்குவடோரின் கலபகோஸ் தேசிய பூங்காவில் மஞ்சள் உடும்புகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.40 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன மஞ்சள் உடும்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 3 வரை இஸபெலா தீவில் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.அவர்கள் 228 மஞ்சள் உடும்புகளைக் கண்டுபிடித்தனர்.
அதன்படி, 40 ஹெக்டர் பரப்பளவில் சுமார் 700 மஞ்சள் உடும்புகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அந்தப் பகுதியில் ஆடு, நாய் போன்ற விலங்குகள் பெருகியதால் மஞ்சள் உடும்பு கிட்டத்தட்ட அழிந்து விட்டதாக கூறப்பட்டது.
இப்பகுதியில் ஆடுகளை அகற்றியது, உடும்புகளுக்கு தீவனம் வழங்கியது போன்றவற்றால் மஞ்சள் உடும்புகள் மீண்டும் தலைதூக்க வழிவகுத்தது.