சிங்கப்பூரில் அவ்வப்போது புது புது திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளின் பேருந்து நிறுவனங்களுக்கு டிரைவர் வேலைக்கு வெளிநாட்டு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி பேருந்து நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களின் வரம்பை குறிப்பிட்ட காலத்துக்கு உயர்த்துவது திட்டங்களில் ஒன்று.
பள்ளி பேருந்து நிறுவனங்களின் விலைவாசி உயர்வை சமாளிக்க உதவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க உள்ளூர் ஓட்டுநர்களை பணி அமர்த்த விரும்பும் நிறுவனங்களுக்கு இந்த புதிய திட்டம் உதவும்.
விலைவாசி உயர்வு காரணமாக பள்ளி பேருந்து நிறுவனங்கள் சமீப மாதங்களில் குத்தகையை ரத்து செய்துள்ளன.
அது பெற்றோர்களிடமும், குழந்தைகளிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என கல்வி அமைச்சகம் கூறியது.
நீண்ட காலத்திற்கு பள்ளி பேருந்து சேவைகளை தொடர உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சகம் குத்தகை நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் என்று கூறியுள்ளது.
குழந்தைகளை எங்கிருந்து ஏற்ற வேண்டும், எங்கே அவர்களை இறக்க வேண்டும் என்பதை பேருந்து நிறுவனங்கள் முடிவு செய்ய அனுமதிக்கப்படும்.
அடுத்த ஆண்டு புதிய குத்தகை மறுஆய்வு அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கிடையில் வீட்டிற்கு அருகில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்குமாறு கல்வி அமைச்சகம் அறிவுறுத்துகிறது.