அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா...??

இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது. தினமும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது என்பது இன்று பலரின் நிலையாக உள்ளது. இப்படி எண்ணெயில் வறுத்த,பொரித்த அசைவ உணவுகளின் சுவையை நாம் கடைபிடித்தால்,நாம் அடிக்கடி அசைவ உணவுகளை உண்ணும் பழக்கத்தை வைத்திருக்கிறோம்.
கோழி இறைச்சி, காடை, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை அசைவ உணவுகள், ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்புவது பிராய்லர் கோழியை தான். இறைச்சியில் இரும்புச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இறைச்சியில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.சில வகையான இறைச்சிகள் இதய நோய் மற்றும் இரத்த சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே அசைவம் குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.
அசைவ உணவுகளுக்கு மாற்றாக பல சைவ உணவுகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் வண்ணமயமான உணவுகளை உண்பதால் அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள் கிடைக்கும். தயிர், இட்லி போன்ற வெள்ளை உணவுகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பச்சை நிற கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேபோல, சைவ உணவுகளில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.ஆட்டிறைச்சி, சிக்கன் போன்ற இறைச்சிக்கு பதிலாக சோயா, பலாப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.மீனுக்குச் சமமான சத்தை ராஜ்மா பீன்ஸால் கொடுக்க முடியும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. கால்சியம் சத்து பெற பாதாம் பால், தேங்காய் பால், சோயா பால் போன்றவற்றை குடிக்கலாம்.
புரதச்சத்தை பெற பீன்ஸ், பச்சை பட்டாணி, சோயா, உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். அசைவம் சாப்பிடுவது அவரவர் விருப்பம். இருப்பினும் அசைவ உணவுகளை தவிர்த்து, அதற்கு இணையான சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan