உலகளாவிய இணையச் சேவை தடங்கல்!! நெருக்கடியில் இருக்கும் டெல்டா ஏர்லைன்ஸ்!!
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 600க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த விமான பயணத்தின் 16 சதவீதம் என்று கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் 5,000க்கும் மேற்பட்ட விமான பயணங்கள் உலகளாவிய இணைய சேவை தடங்கலால் ரத்து செய்யப்பட்டது.
இந்த இணைய சேவை தடங்கலால் அதன் தொழில்நுட்ப செயலிழப்பிலிருந்து மீள முடியாமல் விமான நிறுவனங்கள் போராடி வருகின்றன.
மற்ற விமான நிறுவனங்கள் இணைய சேவையால் ஏற்பட்ட தடங்கலில் இருந்து மீண்டு வருகின்றன. ஆனால் இன்னும் டெல்டா ஏர்லைன்ஸ் கடும் நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிலர் குறித்த நாளில் பயணம் மேற்கொள்ள முடியாமல் புதிய விமானங்களுக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் இதில் விமான பயணங்களை ரத்து செய்த பயணிகளும் உள்ளனர்.
உலகளாவிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட் ஸ்ட்ரைக் மென்பொருள் புதுப்பிப்பானது விமான நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் சுகாதாரம் மற்றும் வங்கி தொடர்பான பிற கணினி சேவைகளிலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
Follow us on : click here