புதிய சிங்கப்பூர் பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள உலகத் தலைவர்கள்!!

புதிய சிங்கப்பூர் பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள உலகத் தலைவர்கள்!!

நேற்று(மே 15) புதிதாக பதவியேற்ற சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்(51) அவர்களுக்கு உலகத் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றிரவு இஸ்தானாவில் உள்ள புல்வெளியில் பதவியேற்பு சடங்கு விழா நடைபெற்றது.

புதிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ளனர்.


சீனா பிரதமர் லீ கியாங் சிங்கப்பூர் பிரதமராக பொறுப்பேற்ற லாரன்ஸ் வோங்கிற்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சின்ஹீவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற சிங்கப்பூர் பிரதமரான லாரன்ஸ் வோங் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த செய்தியை X இல் ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார்.

மலேசியா துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி,மலேசியா அமைச்சர்கள்,ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா,அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை சிங்கப்பூர் பிரதமராக பொறுப்பேற்றுள்ள லாரன்ஸ் வோங்கிற்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்று சிங்கப்பூர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய திரு.லீ சியன் லூங்கிற்கு தங்களது நன்றி மற்றும் வாழ்த்துக்களை உலகத் தலைவர்கள் தனித்தனி கடிதங்களில் தெரிவித்துள்ளனர்.