கிருமி தொற்றுக்கு முந்தைய நிலையை போக்குவரத்து உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகளில் தொட்டுள்ளது.
இதனை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.நில சோதனைச் சாவடிகள் வழி மூலம் அன்றாடம் கிட்டத்தட்ட 362,000 பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்த எண்ணிக்கை ஆனது கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதி பள்ளி விடுமுறையின் போது பயணம் செய்யப்பட்டதாகும்.
இனி வரப்போகும் மார்ச் பள்ளி விடுமுறையின் போது இதேபோல் அதிகமானோர் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினர்.
அதேபோல் மலேசியாவிலிருந்து வரும் போக்குவரத்தும் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலை இம்மாதம் 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது.
மலேசியாவுக்கு செல்ல கார் அல்லது பேருந்து வழி அல்லது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வர விரும்புவோர் குடிநுழைவு சோதனைச் சாவடிக்கென கூடுதல் நேரத்தை ஒதுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.