சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணும், அவரது மகளும் 76 மில்லியன் Peso-க்கள் மதிப்புள்ள 14.36 கிலோ போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக, மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தாய் மற்றும் மகளின் வயது 63 மற்றும் 39.
இருவரும் கத்தாரின் தோஹாவிலிருந்து, பிலிப்பைன்ஸின் தலைநகரான Ninoy Aquino-விற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கே அவர்கள் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.
முதற்கட்ட அறிக்கையில், அவர்கள் போதைப்பொருளை, உருளை வடிவ கொள்கலன், பிஸ்கட் டின்கள் முதலியவற்றில் மறைத்து வைத்திருந்ததாக தெரியவந்தது.
கைப்பற்றிய போதைப் பொருளோடு சேர்த்து இருவரையும் பிலிப்பைன்ஸ் போதை பொருள் தடுப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.
பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருப்பதால் எந்த கருத்தும் தெரிவிக்க போவதில்லை என்று சிங்கப்பூர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கூறியது.
மேலும் சிங்கப்பூரர்களை போதை பொருளிலிருந்து விலகி இருக்குமாறும் கூறியது.