தாய்லாந்தில் உணவகத்திற்கு வந்த பெண், சாப்பிட்டு முடித்து பணத்தை கேட்ட பொழுது மனநிலை சரியில்லாதது போல் நடித்து ஊழியர்களை ஏமாற்றினார்.
தாய்லாந்தில் பத்தும் தானி என்ற மாநிலத்தில் உள்ள லம் லுக்கா என்ற இடத்தில் பிரபலமான உணவகம் ஒன்று உள்ளது. அந்த உணவகத்திற்கு வந்த பெண் விருப்பமான உணவை வாங்கி சாப்பிட்டதாக தெரிகின்றது.
தனக்கு வேண்டிய உணவை ஒவ்வொன்றாக வாங்கி பொறுமையாக ருசித்த பெண்ணிடம் ஹோட்டலில் வேலை செய்யும் நபர் பில்லினை காட்டிய பொழுது இன்னும் சற்று நேரத்தில் தனது நண்பர் வருவதாகவும் அவர் எனது உணவிற்கான பில்லினை கொடுப்பார் எனவும் தெரிவித்தார்.
இதனை நம்பிய ஊழியர்கள் அந்தப் பெண் சொன்ன வார்த்தைக்காக சிறிது நேரம் காத்திருந்து பின்பு அடுத்தடுத்த டேபிள்களுக்கு உணவினை பரிமாற தொடங்கினர். சற்று நேரம் கழித்து அந்தப் பெண் தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்.
அதனை ரெஸ்டாரண்டில் உள்ள அனைவரும் வித்தியாசமாக பார்க்க தொடங்கினர். அதுவரை தெளிவாக பேசிய அந்தப் பெண் வித்தியாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். பின்பு கழிப்பறைக்கு செல்ல விரும்புவதாக கூறிவிட்டு புறப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து டாய்லெட்டில் குளித்துவிட்டு அவர் திரும்பி வந்தது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது. அதன் பின் உணவிற்கான காசினை கொடுக்காமல் தன் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஹோட்டல் உரிமையாளர்கள் வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தாய்லாந்து நாட்டில் உள்ள செய்தி தொடர்பாளர்களுக்கும் தகவல் கொடுத்தனர். செய்தியாளர்கள் வந்ததும் நடந்ததை ஹோட்டலில் உள்ள ஊழியர்கள் விவரித்தனர். ஒரு பெண் இப்படி நடந்து கொண்டதை எடுத்துக்காட்டி ஹோட்டல் ஊழியர் வருந்தினார்.
அந்த பெண் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த பெண்ணிற்காக வருந்துவதாகவும், அந்த பெண்ணின் வீட்டார்கள் பெண்ணை பத்திரமாக வீட்டிலேயே வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
அந்த பெண் ஏமாற்றும் பட்சத்தில் இதுபோன்று வேறு யாரும் நடந்து கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.