டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர் மீது வெந்நீரை ஊற்றிய பெண்!! முகம் சுளிக்க வைத்த செயல்!!

டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர் மீது வெந்நீரை ஊற்றிய பெண்!! முகம் சுளிக்க வைத்த செயல்!!

மலேசியாவில்லை உள்ள பினாங்கில் 39 வயதுடைய பெண் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார். அந்த பெண்ணின் இந்த மனித நேயமற்ற செயலுக்காக காவல்துறை கைது செய்தது.

டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 33 வயதுடைய அந்த நபர், தனது குடியிருப்பிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நேர்ந்தது.

பாதிக்கப்பட்டவர் தனது 23 வயது சகோதரி மற்றும் மற்ற சகோதரர்களுடன் அதே குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அந்த பெண்ணும், பாதிக்கப்பட்ட ஆணும் அதே குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரது உடலின் வலது பக்கத்தின் முன் மற்றும் பின்புறத்தில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட அந்த நபரின் தங்கை இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். அவரின் சகோதரர் மீது ஆசிட் வீசப்பட்டதாக முதலில் புகார் அளித்தார். அதன்பின் காவல்துறை உண்மையில் என்ன நடந்தது? என்று விசாரித்தது. விசாரணையில் அது ஆசிட் இல்லை வெந்நீர் என்பது தெரிய வந்தது.

அந்த பெண்ணின் மனிதநேயமற்ற செயல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.