கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!!
County cork-ல் 31 வயதுடைய பெண்ணை 40 வயதான ஒருவர் கொன்றதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அன்று நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததாக ஐரிஷ் காவல்துறை தெரிவித்தது.அந்த நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அந்த பெண்மணியின் உடல் அவர் குடியிருந்த மல்லோவில் பிரைட்வெல் லேனில் உள்ள பெல்ஃப்ரியில் கண்டெடுக்கப்பட்டது.
ஐரிஷ் ஒளிபரப்பாளரான RTE-இன் படி அந்தப் பெண்ணின் மார்பு பகுதியில் குத்தப்பட்டுள்ள காயம் இருப்பதாக கூறியது.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here