SIA விமானத்தில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை இழந்த பெண்ணின் தவிப்பு..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை தவறவிட்டார்.
அந்தப் பெண் அது குறித்த தகவலை Reddit தளத்தில் பகிர்ந்து மற்ற இணையவாசிகளிடம் ஆலோசனை கேட்டார்.
இழந்த மோதிரம் திரும்ப கிடைக்கும் என்று நம்பிக்கையில் அவர் Reddit தளத்தில் அந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
SQ25 விமானம் ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் லிருந்து புறப்பட்டு சனிக்கிழமை
(அக்டோபர் 26) சிங்கப்பூரில் தரையிறங்கியது.
அந்த மோதிரம் விமானத்தின் தரையில் விழுந்திருக்கலாம் என்று நம்புவதாக அந்த பெண் கூறினார்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது மோதிரம் காணாமல் போனதை உணர்ந்ததாக கூறினார்.
உடனே சிங்கப்பூர் ஏர்லைன்ஸைத் தொடர்பு கொண்டார்.
அந்த மோதிரத்தை யாரும் திருப்பித் தரவில்லை என அந்நிறுவனம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்தப் பெண்ணின் கதையை கேட்ட சில நெட்டிசன்கள் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறும் வகையில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
காணாமல் போன மோதிரம் பற்றிக் கவலைப்படும் பெண்ணுக்குப் பல “காணாமல் போன கதைகள்” தொடர்ந்து வந்து ஆதரவு தந்தது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0