அமெரிக்காவில் சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் Tammy Reese என்ற பெண் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார்.
இச்சம்பவத்தை அடுத்து அதனை தயாரித்த நிறுவனத்தின்மீது வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டு பென்சில்வேனியா மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பணிபுரியும் இடத்தில் உள்ள சமையலறையில் ஸ்ப்ரே திடீரென வெடித்தது. அங்கு இருந்த Tammy Reese இன் உடலில் தீ பற்றி கொண்டது.
அவரின் தலை, முகம், கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த அந்த பெண்ணிற்கு உரிய இழப்பீடை Conagra Brands நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சுமார் 7.1 மில்லியன் டாலர் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
Conagra Brands நிறுவனத்தின் சமையல் ஸ்ப்ரே வெடித்த சம்பவங்கள் பல நடந்துள்ளன.இதனால் பலர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இத்தகைய சம்பவங்களுக்கான வழக்குகளில் தீர்ப்பு கிடைத்துள்ள முதல் வழக்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நிறுவனம் மேல் முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப் போவதாகவும், இந்த உத்தரவை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் கூறியது.