பொங்கோல் LRT தண்டவாளத்தில் இறந்து கிடந்த பெண்!! தற்கொலையா? தவறுதலாக விழுந்தாரா? தீர்ப்பு வெளியீடு!!

பொங்கோல் LRT தண்டவாளத்தில் இறந்து கிடந்த பெண்!! தற்கொலையா? தவறுதலாக விழுந்தாரா? தீர்ப்பு வெளியீடு!!

சிங்கப்பூர்: கடந்த ஆண்டு பொங்கோல் LRT தண்டவாளத்தில் இறந்து கிடந்த வோங் சூன் ஹெங் என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார் என நம்பப்பட்டது.

ஆனால் அவரின் மரணம் குறித்த விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை; தவறுதலாக கீழே விழுந்துள்ளார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவர் தற்கொலை செய்து கொள்ள எந்த காரணமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த திருமதி வோங், சிங்கப்பூரில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர். அவர் சிங்கப்பூர் பிரஜையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இச்சம்பவம் நடந்ததாக கருதப்படும் மார்ச் 23ம் தேதி அவர் வீட்டில் இருந்து வேலை செய்வதற்காக அலுவலகத்திற்கு சென்று மடிக்கணினியை எடுத்து வரச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் அலுவலகத்தில் சக ஊழியரின் பிரியாவிடை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

விருந்து முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக பொங்கோல் பாதையில் ரயிலில் ஏறி cove LRT இல் இறங்கியுள்ளார்.

ஆனால், ஸ்டேஷனில் இருந்து வெளியேற படிக்கட்டுகளில் இறங்காமல், காரிடாரின் மறுபுறம் நடந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

நடைமேடையின் நடுப்பகுதியை அடைந்ததும் அவர் வேகமாக நடக்க தொடங்கினார். தண்டவாளத்தின் கண்ணாடி தடுப்புகளுக்கு இடையே இருந்த சிறிய இடைவெளியை நோக்கி திடீரென ஓடிய அவர் எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் விழுந்தார்.

பின்பு அங்கிருந்து வேகமாக வந்த ரயில் திருமதி வோங் மீது மோதியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இவரின் இறப்பு குறித்த விசாரணையில் திருமதி வோங் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதும் கடன் சார்ந்த நிதி நெருக்கடியிலும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையில் அவர் மன அழுத்தத்தில் இல்லை என்பது தெரியவந்தது.

அதனால் நீதிமன்றம் அவர் தற்கொலை செய்ததற்கான எந்த சாத்திய கூறுகளும் இல்லாததால் அவர் தவறுதலாக கீழே விழுந்து இருக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.