கோவிட் நோய் பரவலின் போது முகக்கவசத்தை அணியாத பெண்ணிற்கு விதிக்கப்பட்ட அபராதம்!!
கோவிட் நோய் பரவலின் போது முகக்கவசத்தை அணியாத பெண்ணிற்கு விதிக்கப்பட்ட அபராதம்…
சிங்கப்பூர்: COVID-19 நோய் பரவலின் போது முகக்கவசம் அணியத் தவறியதற்காகவும், பாதுகாப்பு இடைவெளி தூதருடன் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதற்காகவும் ஒரு பெண்ணுக்கு 9,200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் செய்ததாக கருதப்படும் 49 வயதான சிங்கப்பூரர் கிளாரியல் கிரிஃபின், செப்டம்பர் 2021 இல் தனது கணவருடன் இருந்தபோது COVID-19 வழிகாட்டுதல்களை மீறியதாக கூறப்படுகிறது.
மெரினா பே சாண்ட்ஸில் உள்ள உணவகத்தை விட்டு வெளியேறும் போது இருவரும் முகக்கவசம் அணியவில்லை. அங்கு அவர்கள் இரவு உணவோடு மதுபானமும் அருந்தியதாக கூறப்படுகிறது.
மேலும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கூறிய பாதுகாப்பு தூதுவரை தொந்தரவு செய்ததாகவும், அனுமதியின்றி தூதரின் முகக்கவசத்தை கீழே இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
கோவில் 19 சூழலில் சிங்கப்பூர் அரசாங்கம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முறையான விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இதனால் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் முகக்கவசத்தை அணியத் தவறிய கிளாரியலுக்கு அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனையோ அல்லது 10,000 வெள்ளி அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Follow us on : click here