பேக்கரி கடையில் அடாவடியாக நடந்து கொண்ட பெண் கைது…!!!

பேக்கரி கடையில் அடாவடியாக நடந்து கொண்ட பெண் கைது...!!!

ஜப்பானின் ஃப்புகுவோக்கா பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெண் ஒருவர் ரொட்டியை நசுக்கி விட்டு பின்னர் அதை வாங்க மறுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) அன்று நடந்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் ரொட்டியின் தரத்தை பரிசோதிப்பதற்காக அவ்வாறு செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

அவர் 5 ரொட்டிகளை இவ்வாறு சோதித்ததாக கூறப்படுகிறது.

அதில் ஒன்று விற்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.

கடைக்காரர் அந்தப் பெண்ணை நிறுத்தி, சேதமடைந்த ரொட்டிக்கு பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அந்தப் பெண் பணம் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

கடைக்காரர் 1 கிலோமீட்டர் தூரம் அவரைப் பின்தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தி பின்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் இதற்கு முன்னர் பலமுறை இவ்வாறு செய்துள்ளதாக கடைக்காரர்
போலிசாரிடம் தெரிவித்தார்.