சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!!

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது...!!!!

சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தில் வாசனை திரவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 35 வயது ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மார்ச் 23, 2025 அன்று புகார் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 இன் இடைவழி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து சுமார் S$250 மதிப்புள்ள வாசனை திரவியத்தை சந்தேக நபர் திருடியதாக கூறப்பட்டது.

பின்னர் சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் சந்தேக நபரின் அடையாளத்தை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆனால் அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 31) சிங்கப்பூருக்குத் திரும்பிய பின்னர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.