கனத்த இதயத்தோடு பாதாளக் குழிக்கு அருகில் இறுதிச் சடங்கை முடித்த குடும்பத்தினர்...!!!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த இந்திய சுற்றுலாப்பயணியின் குடும்பத்தினர் வீடு திரும்புகின்றனர்.
கடந்த மாதம் ஜலான் மஸ்ஜித் இந்தியாவில் 23ம் தேதி நடைபாதையில் நடந்து சென்றபோது பள்ளத்தில் விழுந்த விஜயலெட்சுமி என்ற பெண்ணை தேடும் பணி 9 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அவரது உடலை மீட்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.
இந்நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்துவது ஆபத்தானது என்பதால் அவரைத் தேடும் பணியானது ஆகஸ்ட் 31 அன்று அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.
விஜயலெட்சுமியின் கணவர், மகன், மகள்கள் அனைவரும் இன்று பாதாளக் குழிக்கு அருகில் இறுதி சடங்கு செய்தனர்.
குழியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு இந்தியா திரும்பினர்.
இந்நிலையில் தோண்டப்பட்ட பாதாளக் குழிகளை சரி செய்ய 3 முதல் 6 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குழிக்கு அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Follow us on : click here