2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!!

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி...!!!

ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தபோதிலும், விராட் கோலியின் பேட்டிங் அதிக விமர்சனங்களை பெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் தோல்விகளுக்காக ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர். முன்னதாகவே ஆட்டமிழந்த ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் என்று கூறினர்.இந்நிலையில், நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குஜராத்தை எதிர்கொள்கிறது ஆர்சிபி.

இது தொடர்பான ஒரு நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. அங்கு இருந்த விராட் கோலியிடம் அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விராட் கோலி, அது எனக்குத் தெரியாது.ஒருவேளை அது இந்திய அணிக்கு அடுத்த உலகக் கோப்பையை பெற்று தரலாம் என்று கோலி பதிலளித்தார்.

ரசிகர்கள் இதை வரவேற்றனர்.இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்து விராட் கோலியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கோலி, “ஆஸ்திரேலியா தொடர் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த ஏமாற்றம் இன்னும் என் மனதில் உள்ளது. நான் எப்போது மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் எந்த டெஸ்ட் போட்டியும் இல்லை என்று கூறினார்.

இதனால் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. இருப்பினும், சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று விராட் கோலி கூறினார்.

2023 உலகக் கோப்பையில் விராட் கோலி 11 இன்னிங்ஸ்களில் 765 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் அடங்கும். இதன் மூலம், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார்.

கிரிக்கெட் ஜாம்பவான் Vs விராட் கோலி

2027 உலகக் கோப்பையில் விராட் கோலி மீண்டும் களமிறங்குவதால், சச்சினின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் சச்சின் 44 இன்னிங்ஸ்களில் 2278 ரன்கள் எடுத்துள்ளார்.கோலி 1795 ரன்கள் எடுத்துள்ளார்.

சச்சினின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 484 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் அவர் நிச்சயம் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்று தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.