அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து உலக நிதி சந்தையில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையொட்டி நேற்று சிங்கப்பூர் நாணய வாரியம் அறிக்கை வெளியிட்டது.
சிங்கப்பூரில் வங்கிமுறை வலுவாக இருப்பதாக கூறியது.சிங்கப்பூர் வங்கிகளுக்கும் அமெரிக்காவில் மூடப்பட்ட இரண்டு வங்கிகளோடு பெரிய தொடர்பு ஏதும் இல்லை என்று குறிப்பிட்டது.
சிங்கப்பூர் வங்கிகள் வலுவான முதலீட்டைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டது.வட்டி உயர்வு உள்ளிட்ட அம்சங்களைச் சமாளிக்க தொடர்ந்து கண்காணிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தது.
அமெரிக்காவில் 2 வங்கிகளின் வீழ்ச்சி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களைப் பாதித்து இருக்கிறதா என்பதை மதிப்பிட அரசாங்க அமைப்புகளோட இணைந்து வாரியம் இணைந்து செயல்படுவதாகவும் கூறியது.
அதில் அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்களும் அடங்கும்.
சிங்கப்பூரில் வங்கிகள் நிலையாகவும், வலுவாகவும் இருப்பதை உறுதி செய்ய அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியது