உட்லண்ட்ஸ், துவாஸ் குடிநுழைவு சோதனை சாவடிகளில் நாளை ஜூன் 28-ஆம் தேதி முதல் அடுத்த வாரம் திங்கட்கிழமை ஜூலை 3-ஆம் தேதி வரை அதிக போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
வரும் ஜூன் 29-ஆம் தேதி பொது விடுமுறையான ஹஜ்ஜீப் பெருநாளை முன்னிட்டு குடிநுழைவு சோதனை சாவடிகளில் அதிக கூட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறியது.
நிலச் சுங்கசாவடிகளில் ஜூன் பள்ளி விடுமுறையின் போது அதிக அளவில் கடந்து சென்றனர் என்று குறிப்பிட்டது.
சுமார் 430,000 பேர் கடந்த ஜூன் 16- ஆம் தேதி நிலச் சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் மேற்கொண்டனர்.இது கிருமி பரவலுக்கு முன்பிருந்த நிலைகளையும் தாண்டி உச்சத்தைத் தொட்டது.
நிலச் சுங்கசாவடிகள் வழியாக ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
சராசரியாக 406,000 பேர் நாள் ஒன்றுக்கு என கணக்கிடப்பட்டுள்ளது.
சோதனை சாவடிகள் வழியாக ஜூன் 24,25- ஆம் தேதியான பள்ளி விடுமுறையின் கடைசி வாரமான நாட்களில் சுமார் 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்து சென்றதாக அறிக்கை குறிப்பிட்டது.