சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி விண்ணப்பத்தை மதிப்பிடுவதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்படுமா?

சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் பரிந்துரை வைத்துள்ளார்.

அதாவது,சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி விண்ணப்பத்தை மதிப்பிடுவதற்கு அதில் ஆங்கில தேர்வைச் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்துள்ளார்.

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 1.05 க்கு குறைந்துள்ளது.

இதனால் சிங்கப்பூருக்கு வரும் புதிய குடியேற்றர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு மிக முக்கியம் என்று கூறினார்.இதற்கு இரண்டாம் உள்துறை அமைச்சர் Josephine Teo பதில் அளித்தார்.

ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இங்கு உள்ளவர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணையாக கூட இருக்கலாம் என்றும் கூறினார்.

தேர்வுக்கு பதிலாக குடிநுழைவு அதிகாரிகள் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் வைத்திருப்பதாகவும் கூறினார்.

இதில் சிங்கப்பூரில் விண்ணப்பதாரருக்கு குடும்பங்கள் இருக்கிறதா?அவர்கள் தேசிய சேவை முடித்து இருக்கிறார்களா?உள்ளிட்ட அம்சங்களும் அடங்கும்.