அதிக பண பரிவர்த்தனை செய்தால் உங்கள் வங்கி கணக்கை சிங்கப்பூர் காவல்துறை முடக்குமா?

அதிக பண பரிவர்த்தனை செய்தால் உங்கள் வங்கி கணக்கை சிங்கப்பூர் காவல்துறை முடக்குமா?

சிங்கப்பூரில் வங்கி கணக்கை பயன்படுத்தி அதிகளவு பண பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்றால் சிங்கப்பூர் காவல்துறை உங்களுடைய வங்கி கணக்கை முடக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிங்கப்பூர் காவல்துறை, MOM அதிகாரிகள் பேசுவது போல் போலியான அழைப்புகள் வரும்.

அவ்வாறு உங்களை தொடர்பு கொண்டு உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் அதாவது அக்கவுண்ட் நம்பர் பாஸ்வோர்ட் மற்றும் otp இவைகளை கேட்டால் அவர்களிடம் தகவல்களை கொடுக்க வேண்டாம்.

அதேபோல உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து மிகப்பெரிய தொகை வேறு யாருக்கும் அனுப்பினால் உங்களுடைய கணக்கை சிங்கப்பூர் காவல்துறை முடக்கி விடும் அதிகாரத்தை சிங்கப்பூர் அரசாங்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது.

அதிகப்படியான பண பரிவர்த்தனை செய்தால் முன்பெல்லாம் வாங்கி தான் உங்களுடைய வங்கிக் கணக்கை முடக்கும்.ஆனால்
இப்போது காவல்துறைக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உங்களது வங்கிக் கணக்கை முடக்கிவிட்டால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.நேரடியாக காவல் நிலையத்தில் சென்று கேட்கலாம்.

நீங்கள் காவல்நிலையத்துக்கு செல்லாவிட்டாலும் ஒரு மாதத்திற்குள் காவல் நிலையத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

நீங்கள் நேரில் சென்று எதற்காக பண பரிவர்த்தனை செய்தீர்கள் என்பதற்கான விளக்கத்தை கேட்பார்கள்.

அதன் பின்னர் அடுத்த ஒரு மாதத்தில் உங்களுடைய வங்கிக் கணக்கை அவர்கள் ஓபன் செய்து விடுவார்கள்.

மோசடிக்காரர்களிடம் உங்கள் பணத்தை இழக்காமல் இருபதை தடுக்க உங்களுடைய வங்கிக் கணக்கை முடக்குவதற்கான அதிகாரத்தை அரசாங்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது.

உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை எந்தவொரு வங்கி அதிகாரிகளும் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்க மாட்டார்கள்.

உங்களுக்கு அழைப்பு வந்தால் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் .அவ்வாறு கூறினால் நேரடியாக சென்று வங்கியில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விடுவது உங்களுக்கு நல்லது.

போலியான மோசடிகாரர்களின் வலையில் சிக்காமல் விழித்திருங்கள்.கவனத்துடன் இருங்கள்.

இது போன்ற பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள ‘SGTAMILAN’ இணையப்பக்கத்தில் இணைந்திருங்கள்.