இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..???

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டக்கில் உள்ள பரபதி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்த சூழலில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் வாய்ப்பை நீட்டிக்க இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் இன்றைய போட்டியானது விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வெற்றி பெறுமா…???
உள்ளூர் ரசிகர்களும், மைதான சூழலும் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும். கடந்த சில மாதங்களாக மோசமான பார்மில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, கடந்த போட்டியிலும் தவறவிட்டதால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நிலையில் காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத கோலி இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்கு மேலும் பலம் அளிக்கிறது.
கடந்த போட்டியில் ஷமி தலைமையிலான பந்துவீச்சு பிரிவு ஆரம்பத்திலேயே ரன்களை குவித்தாலும் பின்னர் மீண்டும் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தியது. இதே நிலை நீடித்தால் இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றலாம்.
பிளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, கே.எல். ராகுல்(டபிள்யூ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது ஷமி.
இங்கிலாந்து: பில் சால்ட்(விகே), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், மார்க் வுட்.
இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் டிவியிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் OTTயிலும் ரசிகர்கள் நேரலையில் பார்க்கலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan