நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை தட்டி செல்லுமா ஜப்பான்?!

ஜப்பான் நாடு நிலவுக்கு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தது. செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து SLIM லேண்டரை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக நேற்று(டிசம்பர் 25) நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளதாக விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால், நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமை வந்து சேரும்.

அடுத்த மாதம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SLIM லேண்டருக்கு ” மூன் ஸ்னைப்பர்” என்று செல்லப்பெயரும் வைக்கப்பட்டுள்ளது.