முதுகில் விழுந்த அடி...!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..???

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் குறித்து ஜனவரி 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பெயரும் இடம்பெற்றது.
ஆனால் பும்ரா ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்தார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்து வீசவில்லை. அதன்பிறகு கிரிக்கெட் போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை.
சமீபத்தில், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் பும்ரா ஸ்கேன் செய்யப்பட்டது தெரியவந்தது. பிசிசிஐயின் மருத்துவக் குழு ஸ்கேன் முடிவுகள் குறித்து தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணி நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், நாளை (12ம் தேதி)
அகமதாபாத்தில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் இளம் வீராங்கனை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயரும் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.ல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி.
இந்நிலையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 20ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பின்னர் மார்ச் 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூசிலாந்துடனும் பலப்பரீட்சை நடத்தவிருக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இதே நிலைமை தொடர்ந்தால் நிச்சயம் இந்தியா வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan