மூன்று சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வனவிலங்கு பராமரிப்பாளர்!!

மூன்று சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வனவிலங்கு பராமரிப்பாளர்!!

கிரைமியாவில் 3 சிங்கங்களால் மூத்த உயிரியல் பூங்காக் காவலர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த அந்தப் பெண்மணி 17 வருடங்களாக டைகன் வனவிலங்கு பூங்காவில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பெயர் லியோகாடியா பெரெவாலோவா என அறியப்படுகிறது.

அவர் பராமரித்து வந்த அந்த வனவிலங்கு பூங்காவில் சுமார் 60 சிங்கங்கள் உள்ளன.

இந்தச் சம்பவம் புதன்கிழமை (அக்டோபர் 16) அன்று நடந்துள்ளது.

சம்பவத்தன்று சிங்கத்தின் கூண்டை சுத்தம் செய்வதற்காக அவர் உள்ளேச் சென்றுள்ளார்.

ஆனால் காவலர் இரண்டு அறைகளுக்கு இடையே உள்ள கதவை பூட்ட மறந்ததால் சிங்கங்கள் அவரை தாக்கியுள்ளது.

மிருகக்காட்சிசாலையின் உரிமையாளர் இது போன்ற ஒரு சம்பவம் எப்படி நடந்தது என்றும் விலங்குகள் இதை தாங்களாகவே செய்திருக்க முடியாது என்று கூறினார்.

சம்பவம் இடம்பெற்ற போது அங்கு யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் மற்ற ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​​​அது மோசமான நிலையில் இருந்துள்ளது.

சகஊழியர்களாக பெண்மணிக்கு உதவ முடியவில்லை என்பதற்கு அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.