தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!!

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!!

இதுவரை கண்டிராத அளவு காட்டுத்தீயை தென் கொரியா சந்தித்து வருகிறது.அதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.மேலும் உயிர் சேதமும் நேர்ந்துள்ளது.

காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

காட்டுத்தீ இன்னும் அதிவேகமாக பரவ வறண்ட வானிலை,பலத்த காற்று காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்நாட்டின் கிழக்கு பகுதி காட்டுத்தீயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காட்டுத்தீயால் 28000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காட்டுத்தீ குறைந்தது 6 பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

தீயணைப்பாளர்கள் ,ராணுவ வீரர்கள்,பிற அதிகாரிகள் என 4600 க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தற்காலிக அதிபர் Han Duck Soo தெரிவித்தார்.

உயிரிழந்தோர்களில் பெரும்பாலானவர்கள் குடியிருப்பாளர்கள்,மூன்று பேர் தீயணைப்பாளர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.