கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!
விக்டோரியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத்தீ பல ஹெக்டர்களை நாசமாக்கி வருகிறது.
காட்டுத்தீ அதிகமாக பரவி வருவதால் கிரம்பியன்ஸ் தேசிய பூங்கா அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மின்னலால் திடீரென பரவிய காட்டுத்தீ சுமார் 2,800 ஹெக்டர் நிலப்பரப்பை நாசமாக்கியது.
கிரம்பியன்ஸ் மாநிலத் தலைநகர் மெல்பர்னில் இருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகமாக புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் கிரம்பியன்ஸ். அதனைச் சுற்றிலும் அதிகமான கிராமங்கள் உள்ளன.
காட்டுத்தீ அதிகமாக பரவும் அபாயம் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
காற்றின் வேகம் குறைந்து இருப்பதால் நெருப்பின் தாக்கமும் குறைந்துள்ளது. சுமார் 400 தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க ஈடுபட்டுள்ளனர்.
Follow us on : click here