Latest Singapore News in Tamil

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை!

சிங்கப்பூரில் வயதானவரைக் கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்.ஏன்? வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்ட வயதான மூத்தவரை கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டுநர்க்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.37 வயதுடைய Adrin Low Kim Chye எனும் வாகன ஓட்டுநர் வேண்டுமென்றே வயதான பாதசாரியைக் காயத்தை ஏற்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த குற்றச் சாட்டில் வாக்குவாதத்தின் போது அவர் நீளமான கைவிளக்கு கொண்டு வயதானவரை மிரட்டியதும் வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு மே,17-ஆம் தேதி Heartland Mall அருகே உள்ள Hougang street 21,Block 206 என்னும் இடத்தில் கார் நிறுத்துமிடத்தில் இச்சம்பவம் நடந்தது.

சம்பவத்தன்று 73 வயதுடைய முதியவர் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்தார். Adrian கார் ஹாரனை அடித்துள்ளார்.

அப்பொழுது வயதானவர் Adrian யை தட்டிக் கேட்டு Adrian யைக் கண்டித்தார். அப்போது Adrian வயதானவர் என்றும் பாராமல் முதியவரைக் கன்னத்தில் அறைந்துள்ளார்.

Adrian தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். வேண்டுமென்றே முதியவரைக் காயப் படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

அது மட்டுமல்லாமல் 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் விதிக்க கூட வாய்ப்பு இருக்கிறது.