சிங்கப்பூர் செல்வதற்கு IP வந்த பிறகும் காலதாமதம் ஏற்படுவது ஏன்?
சிங்கப்பூர் செல்வதற்கு IP வந்த பிறகும் காலதாமதம் ஏற்படுவது ஏன்?
சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் தற்போது வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமானதாகும்.
வேலை கிடைத்தாலும் IP வந்தாலும் சில சமயங்களில் நாம் சிங்கப்பூர் செல்வதற்கு அதிக நாட்களாகிவிடுகிறது.
அதற்கு பல காரணம் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணம் சிங்கப்பூரில் நிலவும் தாங்குமிடம் (room) பற்றாக்குறை.
இப்பொழுது சிங்கப்பூர் செல்பவர்கள் தாங்கள் எங்கு தங்குகிறோம் என்று மனிதவள அமைச்சிடம் தெரியப்படுத்த வேண்டும். அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே தங்க வேண்டுமென்று மனிதவள அமைச்சின் விதி உள்ளது.
இதன் காரணமாக தங்கும் இடம் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதனால் தான் பெரும்பாலும் IP வந்த பிறகும் சிங்கப்பூர் செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. உங்களுக்கும் இந்த காரணம் இருந்தால் உங்கள் கம்பெனி உங்களுக்கு தங்குமிடத்தை அமைத்துத் தரும் வரை காத்திருக்க வேண்டியது தான்!! வேறு வழி இல்லை பொறுமையாக காத்திருங்கள் நிச்சயமாக நீங்களும் சிங்கப்பூர் செல்லலாம்.
Follow us on : click here