யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

யானை பாகனுக்கு யானையால் தான் மரணம் ஏற்படும் என்று கூறுவது ஏன்? எதனால்? என்பது உங்களுக்கு தெரியுமா?ஒரு யானையை பழக்குவது இவ்வளவு கடினமான ஒன்றா!!

ஒரு யானையை பழக்கும் போது அதைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு ,ஏழு அல்லது எட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன் நின்று ஆளுக்கு ஒரு குச்சியை கீழே போடுவார்கள்.

அருகில் உள்ள கும்கி யானை ஒன்று கீழே போடப்பட்ட குச்சியை எடுத்து பாகன் கையில் கொடுக்கும்.அதைத் திரும்ப திரும்ப செய்து காட்டும்.

ஆனால் அந்த புதிய யானை அவ்வளவு எளிதில் குச்சியை எடுத்து பாகனிடம் எடுத்து கொடுத்து விடாது.

அந்த புதிய யானை அந்த குச்சியை எடுக்குற வரை கும்கி யானைகளும் விடாது.

கும்கி யானைகள் புதிய யானையை தந்தங்களால் முட்டும்.பாகன்கள் வைத்திருக்கும் குச்சியானது ஒன்றை அகல தடிமன் மற்றும் ஆறடி நீளத்தில் காட்டு மூங்கிலை ஒரு வாரம் விளக்கெண்ணெயில் ஊற வைக்கப்பட்டு,தீயில் வாட்டப்படும்.

யானைகளுக்காக இது உருவாக்கப்படும்.ரப்பர் போல வளைச்சா வளையும் தன்மையில் இருக்கும்.மனிதன் இந்த குச்சியால் அடி வாங்கினால் உயிர் போகவும் வாய்ப்புள்ளது.

பிளிரும் யானை ரெண்டு காலில் எழுந்து நிற்கும்.ஆனால் அந்த யானை குச்சியை எடுக்காது .அந்த குச்சியை எடுக்குற வரைக்கும் கும்கி யானைகள் மற்றும் பாகன்கள் விடமாட்டார்கள்.

அந்த புதிய யானை அடி தாங்காமல் குச்சியை எடுத்து எந்த பாகனிடம் கொடுக்குதோ அந்த பாகனைத் தான் யானைக்கு பிடித்திருக்கு என்று அர்த்தம்.இனி அந்த பாகனுக்கு மட்டுமே கட்டுப்படும்.

அந்த யானைக்கு அவர் தான் வாழ்நாள் முழுவதும் தலைமை பாகன்.யானைக்கு பிடித்த பாகனைத் தேர்ந்தெடுத்தாச்சு.

யானைக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது?

அடுத்ததாக யானைக்கு பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்கப்படுத்துவதற்குள் தும்பிக்கையை தூக்க முடியாத அளவிற்கு கரோல்ல அடைக்கப்படும். மூன்று நாட்களுக்கு உணவு கொடுக்க மாட்டார்கள்.

நான்காவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்ச ஆரம்பிக்கும்.அதன்பின் கொஞ்சம் கரும்பு மற்றும் வெல்லம் கொடுத்து ருசிக்காட்டுவார்கள்.பசியை தூண்டி சொல்றதை கேட்டா கரும்பு ,வெல்லம் கிடைக்கும் என்ற எண்ணத்தை விதைத்து உணர வைத்து தன் வழிக்கு கொண்டு வருவாங்க.

அது தன் பாகன் பேச்சை கேட்டு நடப்பதற்கு எத்தனை அடிகள்,சித்ரவதைகள்.மேலும் பாகனை கண்டாலே ஒரு வித பயம் ஏற்படுற மாதிரி பண்ணிருவாங்க.

எவ்வளவு பயமும் ,பாசமும் ஏற்பட்டாலும் அவ்வளவு எளிதில் அதன் மீது ஏற அனுமதிக்காது.

இறுதியாக என்றைக்கு யானையும் ,பாகனும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ,யானை தன் முன்னங் கால்கள் மடக்கி கொடுத்து அதன் வழியா பாகனை மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ அன்றைக்கு பூஜை செய்து வழிபட்டு கும்கிகளின் துணையோட கரோல் திறக்கப்படும்.

பாகன் யானை மேல் அமர்ந்த பின் தான் கரோலை விட்டு வெளியே வர வேண்டும்.இவ்வாறு இவ்வாறு செய்தால் மட்டுமே அது முழுவதும் பழக்கப்பட்டதற்கான அடையாளம்.

இதெல்லாம் நடப்பதற்கு 48 நாட்கள் ஆகும்.

யானைகளுக்கு மதம் பிடித்தால் என்ன செய்வார்கள்?

நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை யானைகளின் இணைச் சேர்க்கை காலம்.அப்போது யானைகளின் நெற்றியில் இருந்து மஸ்து நீர் வடியும் .

பாகன் மீது பாசமுள்ள யானைகள் மஸ்து தொடக்க நிலையிலேயே பாகனுக்கு எச்சரிக்கை விடுக்கும்.சாதாரணமான நாட்களில் ஒற்றைக் காலில் மட்டுமே சங்கிலி போடப்பட்டிருக்கும்.ஆனால் மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே இரண்டு காலுகளுக்கு சங்கிலி போடப்படும்.

பொதுவாக பாகனை கண்டால் கட்டுப்படும் யானை மஸ்து நேரத்தில் கட்டுப்படாது.

யானையிடம் யாராலும் நெருங்க முடியாது.ஒரே இடத்தில் மூன்று மாதம் இருக்கும்.

அந்த மஸ்து நீரின் வாசம் நீண்ட தூரம் வீசும் .அதன் வாசம் வந்தா எந்த காட்டு யானையும் அந்த சுற்றுப்பகுதியில் இருக்காது.

மஸ்து நிலையின் போது யானை வினோதமாக நடந்து கொள்ளும் ,தும்பிக்கையை தூக்கி தந்தத்தின் மேல் போட்டுக்கொள்ளும்.

முரட்டு தனமாக நடந்து கொள்ளும்.பிளிறி கொண்டே இருக்கும்.பிளிறும் யானை அருகே செல்லக் கூடாது.

மதம் பிடித்துள்ள யானையின் பார்வை வெறித்த மாதிரி இருக்கும் . மண்,செடி,கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும்.ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது.

மஸ்து நீரை அதன் தும்பிக்கையால் தொட்டு ருசி பார்க்கும்.அந்த சுவை அதன் வெறியை மேலும் அதிகரிக்கும்.

யானை பழக்கப்படுத்தும் போது எந்த அளவுக்கு அடி,காயம்,வலி ,வடு ஆகியவை மனதில் நியாபகம் வைத்திருக்கும்.மஸ்து நேரங்களில் வாய்ப்பு கிடைத்தால் அந்த கோபத்தை வெளிப்படுத்தி ருத்ர தாண்டவம் ஆடும்.

மஸ்து காலத்தின் போது யானை தன் பாகன் மீதுள்ள கோவத்தை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதனால் மஸ்து நேரங்களில் நூறு பேர் எதிரில் நின்றாலும் தனது நியாபக சக்தியால் தனது பாகன் மேலுள்ள பகையைத் தீர்க்க தன்னிலை மறந்து வெறி கொண்டு முதலில் பாகனைத் தான் தேடும்.

இதனால் தான் மஸ்து நேரங்களில் தலைமை பாகன் அருகில் இருக்க மாட்டார் .

தப்பி தவறி மஸ்து நேரங்களில் யானை கண்முன்னே பாகன் பட்டால் தனது கோவத்தை வெளிப்படுத்தி ஆக்ரோஷமாக தாக்கும்.