நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிட்ட ஜப்பான்…… திட்டத்தை தள்ளி வைத்தது ஏன்?

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவுக்கு ஏவப்பட்டது. வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது.

உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது. நிலவின் தென்துருவ பகுதியில் விண்கலத்தை தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தட்டி சென்றது. இதுவரை நிலவில் அமெரிக்கா, சீனா, சோவியத் யூனியன் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தரையிறங்கி உள்ளன.தற்போது இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

நிலவுக்கு `Omotenashi´ என்ற விண்கலத்தை ஜப்பான் கடந்த ஆண்டு அனுப்ப முயற்சி செய்தது. ஆனால் அது தோல்வி அடைந்தது.

மீண்டும் விண்கலத்தை நிலவுக்கு ஏவ ஜப்பான் திட்டமிட்டது.நிலவுக்கு `Moon Sniper´ என்ற விண்கலத்தை அனுப்ப தயார் செய்தது.

தற்போது இந்த திட்டத்தை ஜப்பான் ஒத்திவைத்துள்ளது.ஜப்பான் மூன்றாவது முறையாக அதனை ஒத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால்,அதிக உயரத்தில் அதிக காற்று வீசுவதால் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேல் வளிமண்டலத்தில் காற்று நிலைமைகள் பொருத்தமற்று இருப்பதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

எப்போது அதன் விண்வெளி ஆய்வு திட்டத்தை தொடங்கும் என்பதைப் பற்றிய தகவல்களை விண்வெளி ஆய்வு மையம் வெளியிடவில்லை.