இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!!

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!!

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு 265 ரண்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 84 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களும், கே.எல் ராகுல் 42 ரன்களும் அதிகபட்சமாக எடுத்து 48.1 ஓவரில் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இத்தொடரின் மூலம் ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்த இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனலில் கிடைத்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

எனவே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.இந்நிலையில் இந்திய அணியுடன் இறுதிப் போட்டியை சந்திக்கும் அணி எதுவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இரண்டாவது அரையிறுதி போட்டியானது இன்று லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் அணியான நியூசிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி லீக் சுற்றில் குரூப் ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தியது. மேலும் இந்தியாவிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதே மைதானத்தில் சமீபத்தில் நடந்த முத்தரப்பு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 305 ரன்கள் இலக்கை துரத்தி தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.எனவே இந்தப் போட்டியில் கூடுதல் நம்பிக்கையுடன் தென்னாப்பிரிக்காவை நியூசிலாந்து எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தென் ஆப்பிரிக்கா அணி குரூப் ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் ஒரு பலமான அணியாகவே தெரிகிறது.

இந்த இரு அணிகளும் இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து 26 போட்டியிலும், தென் ஆப்ரிக்கா 42 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடிய இரண்டு போட்டிகளில் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே இரு அணிகளும் பலமிக்க அணிகாகவே பார்க்கப்படுகிறது.இதில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வந்தாலும் இந்திய அணியில் உள்ள திறமை மிக்க வீரர்கள் போட்டியை திறமையுடன் கையாள்வார்கள். இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பில்டிங் இரண்டிலும் திறமை மிக்க வீரர்கள் இருப்பதால் இறுதிப் போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.