சிங்கப்பூருக்கு சென்று டெஸ்ட் அடிக்க முடியுமா? அதற்கு எவ்வளவு செலவாகும்? எப்படி டெஸ்ட் அடிப்பது?என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. அதற்கான பதிலாக இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம்.
சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால்? இரண்டு விதமாக டெஸ்ட் அடிக்கலாம்.
ஒன்று, இங்கு PCM Permit பெற்று சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாம்.
இரண்டாவது, இங்கிருந்து PCM Permit சென்று கம்பெனி மூலமாக சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாம்.
இங்கிருந்து PCM Permit மூலம் சிங்கப்பூருக்கு சென்றவுடன் கம்பெனிக்கு தெரியாமல் டெஸ்ட் அடிப்பது ஒரு விதம்.
கம்பெனியே PCM Permit high levy மூலம் எடுத்து டெஸ்ட் அடிக்க வைப்பது இரண்டாவது விதம்.
தற்போது, S Pass Quota சிங்கப்பூரில் பிரச்சனையாக இருக்கிறது. சில கம்பெனிகள் S Pass வைத்திருப்பவர்களுக்கு Quota கொடுக்க முடியாமல் திருப்பி அனுப்புகின்றனர்.
அதனால் S Pass வைத்திருப்பவர்களும் டெஸ்ட் அடிப்பது நல்லது.
கம்பெனியே டெஸ்ட் அடிக்க வைப்பது:
ஒரு சில இன்ஸ்டியூட்ஸ்(Institutes) அவர்களே தொடர்பு கொண்டு 10 நாட்கள் ட்ரைனிங்(Training) கொடுக்கிறார்கள். டெஸ்ட் அடிப்பதற்கும் சேர்த்து கட்டணம் வாங்குவார்கள்.
அதற்கு 4,00,000-லிருந்து 4,30,000 வரை ஏஜென்ட்கள் வாங்குகிறார்கள்.
கம்பெனியே இன்ஸ்டியூட்ஸ்(Institutes) தேர்ந்தெடுத்து கொடுப்பார்கள். அவர்களே பணத்தைச் செலுத்தி விடுவார்கள். மூன்று நாட்களுக்குள் சான்றிதழ்(Certificate) கைக்கு கிடைத்துவிடும்.High Levy லிருந்து Low Levy க்கு மாற்றி விடுவார்கள்.
கம்பெனிக்கு தெரியாமல் நீங்களாக டெஸ்ட் அடிப்பதற்கான முயற்சி:
ஒரு சில கம்பெனிகள் PCM அல்லது Shipyard Permit- இல் High Levy மூலம் எடுப்பார்கள். ஆனால், ஊழியர்களை டெஸ்ட் அடிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.
ஏனென்றால், அவர்களுக்கு High Levy மூலம் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி இருக்கும். நீங்கள் அதனை அறியாமல் டெஸ்ட் அடித்துவிட்டால், நீங்கள் Low Levy க்கு மாற்றப்படுவீர்கள். நீங்கள் பணிபுரிந்துக் கொண்டிருந்த கம்பெனியில் இருந்து உங்களை வெளியேற்றி விடுவார்கள் அல்லது ஊருக்கு திருப்பி அனுப்பி விடுவார்கள்.கம்பெனி உங்களை High Levy க்கு எடுத்திருப்பார்கள். நீங்கள் Low Levy க்கு மாற்றப்பட்டால் கம்பெனிக்கு நஷ்டம்.
நீங்கள் சிங்கப்பூர் சென்றவுடன் உடனடியாக டெஸ்ட் அடிப்பதற்கு பணத்தைக் கட்டாமல் கம்பெனியில் டெஸ்ட் அடிப்பதற்கு அனுமதி கொடுப்பார்களா? மாட்டார்களா? டெஸ்ட் அடித்தபின், அதே கம்பெனியில் வேலை செய்யலாமா? கம்பெனி அனுமதிக்கவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூருக்கு PCM, Shipyard, S Pass மூலம் சென்று கம்பெனிக்கு தெரியாமல் டெஸ்ட் அடிக்க நினைப்பவர்கள். முதலில், நீங்கள் இருக்கும் இடத்தில் அருகில் உள்ள Institutes தேடுங்கள்.அதன்பின், Institutes க்கு நேரடியாக சென்று விசாரிப்பது மிகவும் நல்லது.
அதற்கு எவ்வளவு செலவாகும்?
கிட்டத்தட்ட 800 டாலர் முதல் 1900 டாலர் வரை செலவாகும். ஒவ்வொரு டெஸ்ட்டுக்கும் செலவுகள் மாறுபடும்.
நீங்கள் Institutes – இல் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவை :
நீங்கள் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள் என்றால், எத்தனை நாட்கள் டெஸ்ட் அடிக்கலாம்? எப்போது Main test தேதி வரும்? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதோடு, கம்பெனியில் என்ன காரணம் சொல்லிவிட்டு வரலாம்? என்பதையெல்லாம் முடிவு செய்த பின் முழு பணத்தையும் கட்டி விடுங்கள்.
ட்ரைனிங்(Training)ஞாயிற்றுக்கிழமை கொடுப்பார்கள்.ஆனால், Main Test வேலை நாட்களில் தான் இருக்கும். அதனால், நீங்கள் கம்பெனியில் ஏதேனும் காரணத்தைக் கூறி லீவு போட வேண்டி வரும்.
பணத்தைப் பாதியாக செலுத்தாமல் முழுமையாக செலுத்துங்கள்.ஏனென்றால், முழு பணத்தைச் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். நீங்கள் பாதி பாதியாக பணத்தைச் செலுத்தினால், Main Test தள்ளிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.
PCM, Shipyard Permit- இல் செல்பவர்களின் இரண்டு மாத சம்பளம் டெஸ்ட் அடிப்பதற்கான செலவாகும். அதனால்,பணத்தை ரெடி பண்ணதற்கு பிறகு,அடுத்த கட்ட நடவடிக்கையை எடுங்கள்.அவசரப்பட்டு செயல்பட வேண்டாம்.
சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, நல்லபடியாக சிங்கப்பூர் வந்தவுடன், கம்பெனி டெஸ்ட் அடிப்பதற்கு அனுமதிப்பார்களா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எந்த டெஸ்ட் அடிக்கலாம்? என்பதை தேர்ந்தெடுத்தபின், டெஸ்ட் அடித்தீர்கள் என்றால் மூன்று நாட்கள் தான்.
முதல் இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமை. மற்றொருநாள், வேலை நாட்களில் ஒரு நாள் லீவ் போட்டு செல்வீர்கள்.
டெஸ்ட் அடித்தபின் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் ரிசல்ட் வந்துவிடும்.
அங்கிருந்து டெஸ்ட் அடித்து வேறு கம்பெனிக்கு மாற முடியாது. அதனால்,நீங்கள் இந்தியா வந்துதான் சிங்கப்பூருக்கு போகலாம்.
இப்போது Quota பிரச்சினை இருப்பதால் சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பது நல்லது.Quota பிரச்சனை இல்லை என்றால், இந்தியாவில் டெஸ்ட் அடிப்பது நல்லது. இரண்டுக்குமே ஒரே மாதிரியான செலவுகள் தான் வரும். சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதால் வேலை செய்து கொண்டே டெஸ்ட் அடிப்பீர்கள்.ஆனால், இந்தியாவில் டெஸ்ட் அடிப்பது மட்டும்தான்.
சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டபின் செல்வது நல்லது.