சாலையைக் கடக்கும்போது சிறுமி மீது வேகமாக வந்து மோதிய கார்!! தூக்கி வீசப்பட்ட சிறுமி!!

சாலையைக் கடக்கும்போது சிறுமி மீது வேகமாக வந்து மோதிய கார்!! தூக்கி வீசப்பட்ட சிறுமி!!

சிங்கப்பூரில் புக்கிட் பாத்தோக்கில் உள்ள Bukit View உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே சாலை விபத்து நேர்ந்தது.

இந்த விபத்து ஏப்ரல் 16-ஆம் தேதி காலை நடந்தது.

வெள்ளை நிற Honda Vezel கார் ஒன்று வேகமாக 12 வயது சிறுமி மீது மோதியது.

இதனால் சிறுமி தூக்கி வீசப்பட்டார்.

சிறுமியை மீட்டு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு காலை சுமார் 7.05 மணியளவில் அழைப்பு வந்ததாக தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக 50 வயதுடைய கார் டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்த வீடியோ SGRoad vigilante முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.