சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..??

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணி அரையிறுதியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது, குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஆனால், புள்ளிப்பட்டியலில் எந்த அணி முதலிடம் வகிக்கும், எந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப் Aபிரிவில் முதலிடம் பிடிக்கும். ஒருவேளை நியூசிலாந்து வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி குரூப் A பிரிவில் முதலிடத்தில் இருக்கும்.
அதேபோல், குரூப் B பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா பணிகள் தலா மூன்று புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் உள்ளன.
ஆப்கானிஸ்தான் அணிக்கு இனி போட்டிகள் இல்லை. தென்னாப்பிரிக்காவின் தோல்வி மற்றும் நிகர ரன் ரேட் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தாலும், நிகர ரன் ரேட் பரிதாபமாக உள்ளது.
தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தினாலோ அல்லது தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தாலோ, ஆப்கானிஸ்தானை விட அதிக நிகர ரன் ரேட்டை வைத்திருப்பதால் இந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
தற்போது ஆப்கானிஸ்தானின் நிகர ரன் ரேட் மிகவும் மோசமாக இருப்பதால் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு சாதகமாக உள்ளது.
ஆனால் குரூப் B இல் தென்னாப்பிரிக்கா எந்த இடத்தை பிடிக்கும் என்பது என்பது இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகுதான் தெரியவரும்.
தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், குரூப் B புள்ளிப்பட்டியலில் தென்னாபிரிக்கா 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்கும்.
தென்னாப்பிரிக்கா ஒருவேளை தோற்றால் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். அப்போது ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடித்திருக்கும். குரூப் A இன் முதல் இடத்தைப் பிடிக்கும் அணி, குரூப் B இன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியுடன் அரையிறுதியில் விளையாடும்.இதன்மூலம் குரூப் Aபிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்தால், குரூப் B இல் 2-ம் இடம் பிடித்த அணியுடன் அரையிறுதியில் விளையாடும்.
எனவே, குழு B இல் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடித்தால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும்.இல்லை என்றால் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் அரையிறுதியில் சந்திக்கும்.புள்ளி பட்டியலில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகளில் அரையிறுதிக்கு முன்னேறும் அணியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan