உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எந்த இடத்தைப் பிடித்துள்ளது?

உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எந்த இடத்தைப் பிடித்துள்ளது?

சிங்கப்பூர்: உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் கடற்கரைத் தோட்டம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டது.

பாசிர் ரிஸ் பார்க் என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு கடற்கரை பூங்காவாகும். இது நாட்டின் மிகப்பெரிய மற்றும் மாறுபட்ட பூங்காவாக பார்க்கப்படுகிறது.

இது 1989இல் திறக்கப்பட்டது. அது ஒரு தோட்ட பகுதியாகவும் மீன்பிடி கிராமமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. பாசிர் ரிஸ் என்பதற்கு மலாய் மொழியில் வெள்ளை மணல் என்று பெயர். மலாய் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய கிராமங்கள் இந்த பூங்காவில் உள்ளது.

இந்த பூங்காவானது கடற்கரை மண்டலம்,சதுப்பு நிற மண்டலம்,பூங்கா மண்டலம் என மூன்று முக்கிய மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. கடற்கரை மண்டலத்தில் ஜோகூர் ஜலசந்தியின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை காண முடிகிறது. சுமார் 6 ஹெக்டர் அளவில் உள்ள சதுப்புநில மண்டலமானது சதுப்பு நில காடுகளின் வளமான மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை பிரதிபலிக்கின்றன. மேலும் பறவைகள், விலங்குகள் ,பலகை நடைபாதைகள் போன்றவை பார்வையாளர்களை ஈர்க்கின்றன.பார்க் லேண்ட் மண்டலத்தில் பறவைகள், வண்ணமயமான பூக்கள், பசுமையான மரங்கள், ஸ்கேட்டிங்,சைக்கிளிங், கேம்பிங் போன்றவற்றை அனுபவித்து மகிழலாம். மொத்தத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கும் அனைத்து விதமான அமைப்புகளும் ஒரே இடத்தில் உள்ளதால் மக்கள் அதிகம் விரும்பும் சுற்றுலா தளமாக பார்க்கப்படுகிறது.

மேலும் நியூயார்க் நகரத்தின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உலகின் சிறந்த சுற்றுலாத்தலமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

பயண இணையதளமான TripAdvisor அது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.

டிரிப் அட்வைசர் உலகின் சிறந்த இடங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வந்தது.

அதில் பல சுற்றுலா பயணிகள் கடற்கரை தோட்டம் அற்புதமானது மற்றும் பார்க்க வேண்டிய ஒன்று என்று கூறினார்கள்.

டிரிப் அட்வைசரில் உள்ள முதல் 3 இடத்தை பெற்றுள்ள சுற்றுலா தளங்களின் பட்டியலில் முதலாவது இடத்தில் நியூயார்க் நகரில் உள்ள Empire State கட்டிடமும், இரண்டாவது இடத்தில் பாரிஸின் Eiffel Tower , மூன்றாவது இடத்தில் ஆம்ஸ்டர்டாமின் Anne Frank House இடம்பெற்றுள்ளது.