வைலண்ட்னு நினைச்சு போன கடைசில சப்புன்னு முடிஞ்சிடுச்சு…..

பிரிட்டனின் கேன்வி தீவைச் சேர்ந்த ஒருவர், அவர் வசிக்கும் பகுதியில் பெண் ஒருவர் அழுவது போன்ற சத்தம் ஒன்றை கேட்டுள்ளார்.

எப்படியாவது ஆபத்தில் உள்ள அந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

தகவலை அறிந்தவுடன் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு சென்ற காவல்துறைக்கு ஆச்சரியமும் வயிறு குலுங்க சிரிப்பும் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தால் பெண்ணின் குரலில் சாதாரண கிளி கத்தியுள்ளது என்பது தெரிய வந்தது. அதனைப் பார்த்த காவல்துறை அதிகாரிகளால் அவர்களின் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர்.

ஸ்டீவ் உட் என்பவர் சுமார் 21 வருடங்களாக பறவைகளை வளர்த்து வருகிறார். இவர் ஒரு பறவை காப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்.

அவரது வீட்டு வாசலில் வந்து நின்ற காவல் அதிகாரிகளை பார்த்தவுடன் அவர் சற்று பயந்தும், திகைத்தும் போனார்.

காவல்துறை அதிகாரிகள், தங்களுக்கு பெண் ஒருவர் உதவி கேட்டு அழுது கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது என்றும், அதை விசாரிக்க வந்தோம் என்றும், ஸ்டீவிடம் கூறினார்கள்.

அதற்கு ஸ்டீவ், தான் வளர்க்கும் கிளி ஒன்று வழக்கத்திற்கு மாறான சத்தம் எழுப்பியதாக காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்தார்கள் என்றும், அவரது பக்கத்து வீட்டுக்காரர் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டது சரி என்றும், இதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.