என்ன…!பனியன் அணிந்தால் கரண்ட் பில் குறையுமா…? படிச்சு பாருங்க புரியும்…!

என்ன...!பனியன் அணிந்தால் கரண்ட் பில் குறையுமா...? படிச்சு பாருங்க புரியும்...!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எரிசக்தியை சேமிப்பதற்கான வித்தியாசமான வழியில் பனியன் அணிவதும் சிறந்த வழியாக இருக்கும் என்று செனோகோ எனர்ஜி நிறுவனம் கூறுகிறது.

இன்றைய காலத்தில் மின்சாரம் இல்லாமல் உலகமே இயங்காது என்று நிலை உருவாகி இருக்கிறது. மின்சாரம் என்பது நவீன வாழ்க்கையை மேம்படுத்துகிறது. கல்வி,மருத்துவமனை, நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

மேலும் வீட்டில் உபயோகப்படுத்தும் மின் சாதனங்களை முறையாக பயன்படுத்தினாலே ஆயிரக்கணக்கான வாட்ஸ் மின்சாரத்தை சேமிக்க முடியும். ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்பது போல மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் அது நம் வாழ்வை வளம் பெறச் செய்யும்.

இதனை முன்னிலைப்படுத்த செனோகோ எனர்ஜி நிறுவனம் ‘தேசிய பனியன் மாதம்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது.

கோடையில் ஸ்லீவ்லெஸ் பனியன் அணிவது சிறந்தது.கடுமையான வெப்பத்தை சமாளிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் AC போன்ற மின்சார பயன்பாடும் கணிசமாக குறைகிறது.

ஆற்றலைச் சேமிப்பதற்கான வழிகளைப் பற்றி மட்டும் பேசாமல், சிங்கப்பூரர்கள் ஏற்கனவே ஆற்றலைச் சேமிப்பதற்கான வழிகளை முன்னிலைப்படுத்த விரும்புவதாக நிறுவனம் கூறியது.

தொழில்துறை, போக்குவரத்து மற்றும் அரசு துறைகளில் ஆற்றல் நுகர்வு குறைக்க சிங்கப்பூர் முயற்சிக்கிறது.