என்னது!! இந்த நாட்டுக்கு இந்தியா பயணிகள் போக விசா தேவையில்லையா!!

மலேசியாவில் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

அந்த தகவலை மலேசியா பிரதமர் Anwar Ibrahim அறிவித்தார்.

மலேசியாவுக்குள் நுழைய சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு இனி விசா தேவையில்லை.

விசா இல்லாமல் நுழையலாம் என்று கூறினார்.

விசா இல்லாமல் இந்த இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் 30 நாட்கள் தங்கலாம்.

மலேசியாவுக்குள் அவர்கள் நுழைய விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டாலும்,இந்த இருநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும்.அவர்கள் இதற்குமுன் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா அல்லது அவர்கள் குற்றம் செய்துள்ளனரா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மலேசியாவிற்கு சீனாவிலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்துவதற்கான காரணமும் கூறப்பட்டுள்ளது. மலேசியாவிற்கு அதிக அளவில் இந்த இரண்டு நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். ஆதலால் இந்த நடவடிக்கையை கொண்டு வர உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிக அளவிலான பயணிகள் சீனா மற்றும் இந்தியா நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வருகை புரிவதாகவும் கூறப்பட்டது.