என்ன..!! இந்த குண்டுப் பூனையின் எடை 17 கிலோ வா...!!!
ரஷ்யாவின் பெர்மில் உள்ள ஒரு மருத்துவமனையின் அடித்தளத்தில் 17 கிலோ எடையுள்ள பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பெயர் க்ரோஷிக் என்று கூறப்படுகிறது.
சிற்றுண்டி மீது கொண்ட பிரியத்தின் காரணமாக க்ரோஷிக் என பெயரிடப்பட்டது.
வீட்டு பூனைகள் தோராயமாக 4.5 கிலோ எடையுள்ளதாக இருக்கும். ஆனால் க்ரோஷிக் ஒரு சிறிய குழந்தையின் எடை அளவில் உள்ளது.
க்ரோஷிக்கின் முந்தைய உரிமையாளர்கள் அதை மருத்துவமனையின் அடித்தளத்தில் விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.
சூப், மது, இறைச்சி சாப்பிட்டதால் உடல் எடை அதிகரித்ததாக கூறப்பட்டது.
அதன் எடை காரணமாக எழுந்து நடக்க முடியவில்லை.
க்ரோஷிக் தற்போது Matroskin இடத்தில் உள்ளது.
அதன் எடையை குறைக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
க்ரோஷிக் அதிகரித்த எடையினை இழப்பதை உறுதிப்படுத்த,அதற்கென சிறப்பு உணவு மற்றும் உடற்பயிற்சி முறை உருவாக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக க்ரோஷிக் ஹைட்ரோதெரபி மற்றும் கினிசியோதெரபியில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியானது.
அந்த வீடியோவில் க்ரோஷிக் உடல் எடையை குறைப்பதற்காக மெதுவாக வாட்டர் டிரெட்மில்லில் நடக்கிறது.
Follow us on : click here