சிங்கப்பூரில் ஜூன் 20-ஆம் தேதிக்கும் 24-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் Carousell எனும் மின் வணிகத்தில் இணைய வியாபாரி ஒருவரால் ஏமாற்றப்பட்டதாக காவல்துறைக்கு சில புகார்கள் வந்தன.
வாடிக்கையாளர்களிடம் PayNow வழியாக முன்பணத்தை வாங்கிக் கொண்ட அந்த நபர் பின்னர் மாயமாகி விடுகிறார்.இப்படி ஒரு உத்தியைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக Ang Mo Kio வட்டாரக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மோசடி செய்த 28 வயது வியாபாரியை காவல்துறை ஜூன் 26-ஆம் தேதி அடையாளம் கண்டது.
அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் இதே மாதிரியான மோசடி சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இத்தகைய செயலால் 9,000 வெள்ளிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த 28 வயது நபர் போலி “Pokemon´´ அட்டைகளை Carousell – இல் விற்றதாக நம்பப்படுகிறது.
இன்று (ஜூன் 27) அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் படவுள்ளது.
ஏமாற்றிய குற்றங்களுக்காக அவருக்கு அபராதமும்,10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.