என்ன..!!! த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா…??? வைரலாகும் புகைப்படம்…!!!

என்ன..!!! த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா...??? வைரலாகும் புகைப்படம்...!!!

தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷாவுக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

இதற்கு த்ரிஷா பதிவிட்ட புகைப்படம் மற்றும் தலைப்பு தான் காரணம்.

நடிகை த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இன்று, அவர் மாஸ் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். கில்லி, ஆதி போன்ற படங்களில் நடித்த த்ரிஷா, 19 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லியோ’ படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்தார்.

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா, இடையில் சில வருடங்கள் சரியான கதை கிடைக்காததால் தனது மார்க்கெட்டை இழந்தார். மேலும் கதை நாயகியாக ஜொலிக்க ஆசைப்பட்டாலும் அவர் நடிக்க தேர்ந்தெடுத்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியடைந்ததால், அவரது மார்க்கெட்டை இழக்க நேரிட்டது.

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தின் முக்கிய கதாபாத்திரமான குந்தவை என்ற அவரது வேடம் பரவலாக கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றி த்ரிஷாவை மீண்டும் ஒரு பிஸியான நடிகையாக்கியது.

இந்நிலையில் அவரது மார்க்கெட் உயர்ந்து நயன்தாராவைப் போலவே, ஒரு படத்திற்கு 8 முதல் 10 கோடி வரை சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ மற்றும் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரும் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தவிர, தக் லைஃப், சூர்யா 45, ராம் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு, பிரபல தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் த்ரிஷா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.ஆனால் பின்னர் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து த்ரிஷா சில காதல் சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், அவை எதுவும் திருமணம் அளவிற்கு செல்லவில்லை.

இந்நிலையில், த்ரிஷா சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் மற்றும் அதன் தலைப்பு, அவருக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதா என்பது குறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்டியது.

பச்சை நிற பட்டு உடையில் தலையில் மல்லிகைப் பூ மற்றும் மூக்குத்தியுடன் மிகவும் அழகாகத் தெரிகிறார்.

இந்தப் புகைப்படத்தை அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு “காதல் எப்போதும் வெல்லும்” என்று தலைப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த புகைப்படத்திற்கு 1000க்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டு 21000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு ரசிகர்கள் சிலர் உங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா வாழ்த்துக்கள் என்று கூறி வருகின்றனர்.