என்ன..!! உலகில் கொசுவே இல்லாத நாடு ஒன்று உள்ளதா..???

என்ன..!! உலகில் கொசுவே இல்லாத நாடு ஒன்று உள்ளதா..???

நம்மில் பலரும் கொசுக்கடியால் படாத
பாடுபட்டிருப்போம். கொசுக்கடிகளில் இருந்து நம்மை பாதுகாக்க வீடுகளில் கொசுக்கள் நுழையாதபடி கொசு வலைகள்,கொசு மருந்து போன்ற ஏற்பாடுகளை செய்தாலும் கொசுக்கள் எங்கிருந்து வருகின்றது என்றே தெரியாமல் மீண்டும் கடித்து விட்டுச் செல்லும். மேலும் கொசுக்களால் பரவக்கூடிய நோய்களும் உள்ளன.

நாம் இப்படி கஷ்டப்பட்டு இருக்கும் வேளையில் கொசுக்களே இல்லாத நாடு ஒன்று இருக்கிறதாம்..ஆம், நண்பர்களே, உலகில் அப்படி ஒரு நாடு இருக்கிறது. இன்றைய பதிவில், அது எந்த நாடு, எங்கு அமைந்துள்ளது போன்ற தகவல்களைக் காண்போம்.அது எந்த நாடு, ஏன் அங்கு கொசுக்கள் இல்லை என்பதை அறிய இந்தப் பதிவை முழுமையாகப் படியுங்கள்.

கொசுக்கள் எவ்வளவு கொடூரமானவை என்பது கொசுக்களால் கடிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த கொசுக்களின் கடியால் பலர் இரவில் தூக்கத்தை இழந்துள்ளனர்.

அந்த நேரத்தில், கொசுக்கள் இல்லாத ஒரு நாட்டிற்குச் சென்றால் எப்படி இருக்கும்…
நீங்க நினைக்கிற மாதிரி ஒரு நாடு இருக்குன்னு சொன்னா நம்புவீர்களா? ஆமா, ஃப்ரெண்ட்ஸ், அப்படி ஒரு நாடு இருக்கு.அது தான் வடக்கு அட்லாண்டிக்கில் இருக்கிற ஐஸ்லாந்து..! உலகத்துல கொசுக்கள் இல்லாத ஒரே நாடு இதுதான்…

மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த உயிரினமும் இந்த நாட்டில் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இங்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த நாட்டில் பாம்புகள் கூட கிடையாதாம்.

கொசுக்கள் அனைத்து காலநிலைகளிலும், குறிப்பாக குளிர்காலத்தில் உயிர்வாழும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இருப்பினும், அவைகளால் ஐஸ்லாந்தில் மட்டுமே உயிர்வாழ முடியவில்லை என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரிய புதிராக இருந்தது.

அதைப் பற்றி ஆராய்ந்தபோது, ​​கொசுக்கள் பொதுவாக தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.ஆனால் ஐஸ்லாந்தில் மூன்று முறை மிகப்பெரிய உறைபனி காலம் வருகிறது.எனவே கொசுக்கள் அங்கு வாழவோ அல்லது முட்டையிடவோ முடியாது.அதனால்தான் ஐஸ்லாந்தில் கொசுக்கள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஐஸ்லாந்தின் மண் மற்றும் நீரின் வேதியியல் கலவையும் இங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமாக, விரைவில் அங்கு கொசுக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

Follow us on : click here