ஒரே நேரத்தில் அனைத்து பொது மருத்துவமனைகளின் இணையதளத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கான காரணம் என்ன??

நேற்று , நவம்பர் 1 காலை 9 மணிக்கு மேல் சிங்கப்பூரின் அனைத்து பொது மருத்துவமனைகள் , கிளினிக்குகள் மற்றும் ஹெல்த்கேர் சென்டர்களின் இணையதள சேவைகளில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் 7 மணி நேர முயற்சிக்குப் பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.இவ்வாறு ஒட்டுமொத்த பொது மருத்துவமனைகளின் இணையதள சேவை அனைத்தும் ஒரே நேரத்தில் சிக்கல் ஏற்பட காரணம் என்ன?? ஒருவேளை 2018 – ல் நடைபெற்ற SingHealth -யின் தரவு கசிவு போன்ற சைபர் தாக்குதலாக இருக்குமோ?? என்ற பல்வேறு கேள்விகள் பரவத் தொடங்கியது.

மக்களிடையே எழுந்த இத்தகைய சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் , நெட்ஒர்க் தடங்கலுக்கான காரணத்தை விளக்கினார் , Acronis – இன் தலைமை பாதுகாப்பு அதிகாரி Kevin Reed.

Singhealth ( சிங்கப்பூர் ஹெல்த் சர்வீஸ்) , NUHS ( தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை) மற்றும் தேசிய ஹெல்த்கேர் போன்ற மருத்துவமனைகள் முதல்நிலை மருத்துவ குழுக்கள் ஆகும். இந்த முதல் மூன்று பொது மருத்துவமனைகள் முறையே கிழக்கு , மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருக்கும் ஹெல்த் சென்டர் , பாலிகிளினிக் போன்ற மருத்துவமனைகளை தன்கீழ் கொண்டு இயங்கிவருகிறது.

மேலும் இந்த அனைத்து பொது மருத்துவமனைகளின் ஒட்டுமொத்த நெட்ஒர்க் ஒரே IP ஐடியில் இயங்கி வருகிறது.இதன் காரணமாகவே ஒரே நேரத்தில் அனைத்து இணையதளங்களும் செயலிழந்தது என்றார் Kevin.

ஆனால் இந்த நெட்ஒர்க் சிக்கலுக்கான தகுந்த காரணம் ஏதும் கண்டறியப்படவில்லை என சிங்கப்பூரின் தேசிய ஹெல்த்டெக் ஏஜென்சி “Synapxe ” தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருந்தது. மேலும் இந்த முதல் மூன்று மருத்துவ குழுக்களும் அதன் கீழ் செயல்பட்டு வந்த ஹெல்த் சென்டர்களிலும் எவ்வித மருத்துவ சேவைகளும் தடைப்படவில்லை என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து கடும் முயற்சிக்கு பிறகு நேற்று மாலை 5 மணிக்கு மேல் அனைத்து பொது மருத்துவ இணையதளங்களும் இயல்பாக செயல்பட தொடங்கியது.