தஞ்சோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினர் Joan Pereira கோவிட் நோய் கிருமி உருமாறி வரும் ரகங்களில் இருந்து பாதுகாக்க சுகாதார அமைச்சகம் ஒரு புதிய வகை தடுப்பூசியைப் பெறுகிறதா என்று கேள்வி கேட்டார்.
அதற்கு சுகாதார அமைச்சர் Ong Ye Kung பதிலளித்துள்ளார்.அது பற்றிய முழு தகவல் அடுத்த வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றார்.
தற்போது Omicron கிருமி வகையிலிருந்து பாதுகாத்து கொள்ள இரு திறன் கொண்ட mRNA தடுப்பூசி போடப்படுகிறது. இதுவே ஆகப் புதிய தடுப்பூசி என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.
இந்த தடுப்பூசிகள் தேசிய தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
புதிய தடுப்பூசிகள் வெளியிடப்படும்போது சுகாதார அமைச்சகம் அவற்றை ஆய்வு செய்யும் என்றும் கூறினார்.