ஹவ்காங் பெண் கொலைச் சம்பவத்தில் கைதான ஆடவரின் தற்போதைய நிலை என்ன…???

ஹவ்காங் பெண் கொலைச் சம்பவத்தில் கைதான ஆடவரின் தற்போதைய நிலை என்ன...???

சிங்கப்பூர்: ஹவ்காங்கில் 34 வயது பெண்ணைக் கொலை செய்ததாக 42 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவர் தற்பொழுது மனநல மதிப்பீட்டிற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த டூ சாய்ஸிங் என்பவர்,புளோக் 210, 21 ஹவ்காங் தெருவின் முதல் தளத்தில் உள்ள ஒரு கடையில் திருவாட்டி டாவ் தி ஹோங்கைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இச்சம்பவம் டிசம்பர் 10 ஆம் தேதி காலை 11.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலைச் சம்பவத்தின் விசாரணையில் இருவருக்கும் பணம் தொடர்பான பிரச்சனை இருந்து அதனால் தகராறு ஏற்பட்டு கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

டுவை மூன்று வாரங்களுக்கு சாங்கி சிறை வளாக மருத்துவமனையில் காவலில் வைக்க காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

டுவின் வழக்கு அடுத்த மாதம் 9ஆம் தேதி (ஜனவரி 2025) மீண்டும் விசாரணைக்கு வரும்.